திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய மாகந்துரே மதுஷ் என்று அழைக்கப்படும் சமரசிங்க ஆராச்சிலாகே மதுஷ் லக்ஸித மாளிகாவத்தை பகுதியில் பொலிஸாருக்கும் பாதாள குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற பரஸ்பர துப்பாக்கி பிரயோகத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார்.இந்நிலையில், மாகந்துரே மதுஷின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தியப் பின்னர், அவரது உடலை அவரது, சட்டப்பூர்வ மனைவியிடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.