நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக உதவி ஆசிரியர்களினால் ராஜாங்க அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் மற்றும் மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் கணபதி கனகராஜ் ஆகியோரிடம் மேற்கொள்ளப்பட்ட  முறைபாடுகளுக்கு அமைய அமைச்சர் மற்றும் மத்திய மாகாண ஆளுநர் கடந்த மாத முற்பகுதியில் இது தொடர்பான  கலந்துரையாடல்களை  மேற்கொண்டனர்.

இதை தொடர்ந்து ஆசிரிய உதவியாளர்களின் நியமனங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கிவைக்கப்படுமென மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இன்று காலை அமைச்சரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டுஅறிவித்தார். 

இதற்காண சகல நடவடிக்கைகளையும் வெகுவிரைவில்  பூர்த்திசெய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.