இந்தியா இராமநாதபுர மாவட்ட பகுதியிலிருந்து, இலங்கைக்கு கள்ளத்தோணி மூலம் கடத்த இருந்த 500 கிலோ சமையல் மஞ்சள் மூட்டைகளை, ராமேஸ்வரம் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதோடு, சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்துள்ளனர்.   

ராமேஸ்வரம் சுங்கத்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமையவே இவ்வாறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட 7 மூட்டைகளிலிருந்து சுமார் 500 கிலோ சமையல் மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மேலும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சுங்கத்ததுறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.