அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தின் தென்கிழக்கு பகுதியிலிருந்து 56 மைல் தூரத்திலும் ஏங்கரேஜுக்கு தென்மேற்கே 600 மைல் தொலைவிலும் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் குறித்த பகுதியில் சுமார் 7.5 ரிக்டர் அளவுகோலில்  நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் அருகில் உள்ள கட்டிடங்கள் குளுங்கியதுடன்  , சேதவிபரங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை.

அத்தோடு குறித்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு , கடலுக்கு செல்ல வேண்டாமெனவும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்தில் மூழ்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.