பாரிஸில் கொல்லப்பட்ட ஆசிரியருக்கு ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

பாரிஸின் பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணியாற்றிய சாமுவேல் பட்டி வகுப்பு ஒன்றில் முகமது நபி குறித்த கேலிச் சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டியதால், 18 வயது மாணவனால் கொல்லப்பட்டார்.

இந்த நிகழ்வில் இளைஞரை பொலிஸார் சுட்டுக் கொன்றனர். ஆசிரியர் கொலை பிரான்சில் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் ஆசிரியருக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டது.

"எங்கள் எண்ணங்கள் சாமுவேல் பட்டியின் குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும், பிரான்சிலும் மற்ற எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து கற்பித்தல் ஊழியர்களுக்கும் செல்கின்றன" என்று ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தலைவர் டேவிட் சசோலி பிரஸ்ஸல்ஸில் நடந்த அமர்வின் தொடக்கத்தில் தெரிவித்துள்ளார்.