விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியூதீன் நீர்கொழும்பில் அமைந்துள்ள பலசேன இளைஞர் குற்றவாளிகளுக்கான பயிற்சி நிலையத்தில் இயங்கும் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது  புத்தளத்திலிருந்து 222 இ.போ.ச. பஸ்களில் 12 ஆயிரம் இடப்பெயர்ந்த வாக்காளர்களுக்கு சிலாவத்துறை பகுதிக்கு வாக்களிக்கச் செல்ல போக்குவரத்து வசதிகளை செய்துக் கொடுத்தமை ஊடாக , நீண்டகாலமாக இடம்பெயர்ந்தோரை மீள் குடியேற்றுவதற்கான திட்டத்தின் 9.5 மில்லியன் ரூபாவை தவறாக பயன்படுத்தியமை  தொடர்பிலான குற்றச்சாட்டின் கீழ் ரிஷாத் பதியூதீன் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இந் நிலையிலேயே அவர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைக்காக மேற்கண்ட நிலையத்திற்கு நேற்றிரவு அனுப்பி வைக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளர் துஷாரா உபுல்தேனியா குறிப்பிட்டுள்ளார்.