யாழ். பல்கலைக்கழக விவகாரம் மிகவும் சுமூகமாக தீர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடடினயாக தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர் என்று அரசாங்கம் அறிவித்தது. 

ஆனால் உதய கம்பன்பில போன்ற அரசியல்வாதிகள் இந்த விடயத்தை வைத்து அரசியல் செய்வதற்கு காத்திருந்தனர். எவ்வாறெனினும் உதய கம்பன்பில போன்றவர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் நல்லிணக்கத்தை மேற்கொள்வது கடினம் என்றும் அரசாங்கம் சுட்டிக்காட்டியது. 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இணை அமைச்சரவை பேச்சாளர்களான ராஜித சேனாரத்ன, கயந்த கருணாதிலக ஆகியோர் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.