காலாவதியாகியுள்ள அனைத்து சாரதி அனுமதிப் பத்திரங்களும் டிசம்பர் 31 வரை செல்லுபடியாகும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சினால் இன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியிலேயே இவ்வாறு அனைத்து சாரதி உரிமங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அமைச்சினால் வெளிடப்பட்ட வர்தமானியானது எதிர்வரும் மார்ச் மாதம் 17 ஆம் திகதி வரை நீடிக்குமென போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுககே தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதோடு , மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அலுவலக செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்துவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.