குளியாபிட்டியவில் மேலும் 14 பேருக்க கொரோனா தொற்று உறுதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் குளியாப்பிட்டியவில் தொற்றுக்குள்ளான மொத்தக கொரோனா தொற்றாளர்களது எண்ணிக்கையானது 25 ஆக உயர்வடைந்துள்ளது.

குளியாபிட்டியவில் அமைந்துள்ள தேவாலமொன்றில் அண்மையில் நடைபெற்ற திருமண நிகழ்வில கலந்து கொண்ட நபர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக குளியாபிட்டிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களுக்கான பி.சி.ஆர். சோதனைகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டு அதன் முடிவுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தன. அந்த முடிவுகளிலேயே இவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக மணமகன் உட்பட 11 பேர் கொரோனா தொற்றுக்குள்ளானமை கண்டறியப்பட்ட நிலையிலேயே அடுத்தகட்டமாக இவர்களுக்கான பி.சி.ஆர்.சோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

ஒக்டோபர் 02 ஆம் திகதி குளியாபிட்டியவில் உள்ள தேவாலயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்விலும், அதன் பின்னர் மற்றொரு தேவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும்  நோயாளர்கள் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.