ஹட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை தோட்டபகுதியில் பன்றிக்கு வெடிவைத்து கொன்ற குற்றச்சாட்டில் மூவரை நேற்று காலை கைது செய்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

டிக்கோயா தரவளை பகுதியில் பன்றியினை வெடி வைத்து கொன்று அவற்றை விற்பனை செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று கொண்டிருந்த போதே அவர்களை  சுற்றிவளைத்து கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது டிக்கோயா மாணிக்கவத்த பகுதியில் வைத்து மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதோடு முச்சக்கர வண்டியிலிருந்த பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த மூன்று சந்தேக நபர்களும் மது போதையில் இருந்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.