கொழும்பு மெனிங் சந்தையை அண்மித்து ஹோட்டல் ஒன்றை நடாத்தி வந்த உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நபர் கந்தானை, கபால சந்தி பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.  

நேற்று முன்தினம் (18.10.2020) ராகமை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனை முடிவிலேயே அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறித்த நபர் உரிமையாளர் என்பதால், அவரே அங்கு காசாளராக செயற்பட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த ஹோட்டலில் நாள் தோறும் சுமார் 200 க்கும் அதிகமானோர் உணவு உண்பதற்காக வருபதாக சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

எனவே குறித்த ஹோட்டலில் பணியாற்றிய 16கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.