தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த மேலும் 72 பேர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்தவகையில் தனிமைப்படுத்தலை முழுமையாக நிறைவு செய்த   55,073 பேர் இதுவரையில் மொத்தமாக விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 நாட்டில் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 76 தனிமைப்படுத்தப்பட்ட நிலையங்களில் 8,623 பேர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல்களில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை கட்டாரில் இருந்து 4 இலங்கையர்கள் நாட்டை வந்தடைந்ததோடு , அவர்களுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.