Published by R. Kalaichelvan on 2020-10-20 09:08:15
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000 கிலோ மஞ்சள் கடற்படை பாதுகாப்பு பரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவின் தமிழகத்தின் நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2000 ஆயிரம் கிலோ மஞ்சளே இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு கடற்படை கடலோர பாதுகாப்புப் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமையவே குறித்த சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு கடத்தப்பட்ட மஞ்சள் சந்தேக நபரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட நிலையில் , சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.