புலி­களின் முக்­கிய தலை­வர்­களை பக்­கத்தில் வைத்­தி­ருந்த போதும், 12 ஆயிரம் புலி­களை விடு­தலை செய்­த­போதும் மஹிந்த, கோத்­தபாய ஆகி­யோ­ருக்கு ஏற்­ப­டாத உயிர் அச்­சு­றுத்தல் தடுப்பில் உள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பதில் ஏற்­ப­டப்­போ­கின்­றதா என முன்னாள் இரா­ணுவ தள­பதி சரத் பொன்­சேகா கேள்வி எழுப்­பினார்.

சிங்­கள மக்­களை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக திருப்பும் முயற்­சி­களை இவர்கள் இன்னும் கைவி­ட­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.

தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களை விடு­விப்­பது தமது உயி­ருக்கு அச்­சு­றுத்­தலை ஏற்­ப­டுத்தும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ மற்றும் பாது­காப்பு செய­லாளர் கோத்­தபாய ராஜபக் ஷ ஆகியோர் தெரி­வித்­துள்ள நிலையில் அது தொடர்பில் வின­வி­ய­போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், கடந்த காலத்தில் யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்த பின்னர் விடு­தலைப் புலி­களின் சர்­வ­தேச பிரி­வினால் நாட்­டிற்கு எதி­ரான பல­மான செயற்­பா­டுகள் காணப்­பட்­டன. ஆனால் நாட்டில் மீண்டும் ஒரு ஆயுத மோதலை ஏற்­ப­டுத்­தக்­கூ­டிய சந்­தர்ப்­பங்கள் காணப்­ப­ட­வில்லை.

ஆனால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவின் அர­சியல் செயற்­பா­டு­களை தக்­க­வைக்கும் ஒரே நோக்­கத்­தி­லேயே நாட்டில் யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்ட பின்­னரும் ஐந்து ஆண்­டு­க­ளாக தொடர்ச்­சி­யாக புலிக்­க­தை­களை கூறி வந்­தனர். இன்றும் அதே கதை­களை கூறி மக்­களை ஏமாற்ற முயற்­சிக்­கி­றார்கள்.

முன்னாள் அர­சாங்­கத்தில் 12ஆயிரம் விடு­த­லைப்­பு­லி­களை விடு­வித்­தனர். புலி­களின் முக்­கிய தலை­வர்­களை அர­சாங்­கத்தில் இணைத்­துக்­கொண்டு கட்­சி­யிலும் அமைச்­சு­க­ளிலும் முக்­கிய பத­வி­களை வழங்­கினர். அவ்­வாறு இருக்­கையில், சர்­வ­தேச புலம்­பெயர் அமைப்­பு­க­ளுடன் நெருங்­கிய தொடர்­பு­களை வைத்­தி­ருந்த போதும், புலி உறுப்­பி­னர்­களை அருகில் வைத்­தி­ருந்த போதும் இவர்­க­ளுக்கு உயிர் அச்­சு­றுத்தல் எவையும் ஏற்­ப­ட­வில்லை.

ஆனால் சந்­தே­கத்தின் பேரில் தடுத்து வைத்­துள்ள தமிழ் கைதி­களை விடு­விக்க கோரும்­போது அவர்­களால் மஹிந்த, கோத்­தபாய ஆகி­யோரின் பாது­காப்­பிற்கு அச்­சு­றுத்தல் ஏற்­பட்­டி­ருப்­ப­தாக கூறு­கின்­றனர். இதை ஒரு­போதும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. சிங்­கள மக்­களை சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ராக முரண்­ப­ட­வைக்கும் ஒரு நட­வ­டிக்­கையே இவர்­களால் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றது.

இந்த அர­சாங்கம் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­காது பாது­காக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­கின்­றது. குறிப்­பாக எவன்கார்ட் விவ­கா­ரத்தில் நீதி அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷ பக்­க­ச்சார்­பாக செயற்­ப­டு­கின்றார் என்­பதை நான் ஆரம்­பத்தில் இருந்தே தெரி­வித்து வரு­கின்றேன்.

அதேபோல் மேஜர் நிஸ்­ஸங்க சேனா­தி­ப­தியும் அமைச்சர் விஜ­ய­தாச ராஜபக் ஷவும் அமெ­ரிக்­காவில் நெருங்­கிய நண்­பர்­க­ளாக செயற்பட்டு எவன்கார்ட் விவகாரம் தொடர்பில் உடன்படிக்கைகளை மேற்­கொண்­டுள்­ளமை தொடர்பில் ஆதா­ரங்­களும் என்­னிடம் உள்­ளன.

இவை தொடர்­பான புகைப்­ப­டங்­களை நான் ஊட­கங்­க­ளிடம் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளேன். அவ்­வாறு இருக்­கையில் அர­சாங்கம் இந்த விவ­காரம் தொடர்பில் மூடி­ம­றைக்­காது உண்­மை­களை கண்டறிய வேண்டும் என்றார்.