நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 25வது படமான 'பூமிகா' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் ஜெயம்ரவி வெளியிட்டிருக்கிறார்.

'காக்கா முட்டை' படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கனா, க/பெ ரணசிங்கம் ஆகிய படங்களின் மூலம் கதையின் நாயகியாக கொமர்சல் வெற்றியைப் பதிவு செய்து முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 25வது படமாக வெளியாகிறது 'பூமிகா'.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் ரதீந்திரன் ஆர் பிரசாத் இயக்கத்தில் தயாராகியிருக்கும் 'பூமிகா' படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். இத்தாலிய நாட்டு ஒளிப்பதிவாளர் றொபர்ற்றோ ஜஜ்ஜாரா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, பிரித்வி சந்திரசேகர் இசை அமைத்திருக்கிறார். திரில்லர் ஜேனரில் தயாராகியிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியிருக்கிறது.

பச்சை வண்ணத்தில் இயற்கையோடு இயற்கையாக நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தோன்றுவதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து இணையத்தில் வைரலாகி வருகிறது.