ஓரிரு மாதங்களுக்கு முன்பு வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த நிலையில் அந்த செய்தி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவானது.

 சமூக வலைதளத்தில் அவரிடம் வாயாடிய அனைவருக்கும் அசராமல் பதில் கொடுத்தார் வனிதா.

தொடர்ந்து பீட்டர் பாலுடன் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்த வனிதா, திருமணமான ஓரிரு மாதங்களிலேயே பீட்டர் பாலுடனான திருமண வாழ்க்கை முடிவுக்கு வரும் அளவுக்கு சென்றுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலம் செய்திகள் கசிந்துள்ளது.

 வெளியூர்களுக்கும் சுற்றுலாதளங்களுக்கும் ஜோடியாக சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த வனிதா மற்றும் பீட்டர் பால் ஓரிரு நாட்களுக்கு முன்பு வனிதாவின் பிறந்தநாளிற்காக கோவாவிற்கு  சுற்றுலா  சென்று வந்த நிலையில் அங்கு இருவருக்கும் ஏற்பட்ட வாய் தகராறு இப்பொழுது முற்றிப்போய் வாய்க்கால் தகராறு ஆகியுள்ளதாக தெரியவருகிறது.

குடிபோதையில் கோவாவில் இருந்து திரும்பும் வழியில் வனிதாவிடம் பீட்டர் பால் தகராறில் ஈடுபட, ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த வனிதா பீட்டர் பாலை வெளுத்து துறத்தி விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..