இந்தியா கொரோனா வைரஸ் தொற்றினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் இரண்டாவது இடத்திலுள்ளது.

அந்நாட்டில் நாளாந்தம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும், உயிழப்புகளும் அதிகரித்து செல்கின்றது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் நோயாளர்களை பாடசாலை பேருந்தில்  நீலம் சிங் என்ற பெண் வைத்தியசாலைக்கு ஏற்றி செல்கின்றார்.

நீலம் சிங் கடந்த  18 ஆண்டுகளாக பாடசாலை பேருந்தை ஓட்டி வந்துள்ளார்.

இந்தியாவில் முடக்கல் நிலை காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டன, ஆனால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தன. குறிப்பாக  நீலம் சிங் வசிக்கும் மும்பை நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்றுகள் அதிகரித்தது.

இதனால் அங்கு குறிப்பாக நோயாளர் காவு வண்டிகள் பற்றாக்குறை ஏற்பட்டது.நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்வதற்கு பாடசாலை பேருந்துகளைப் பயன்படுத்த முடிவு செய்தனர்.

இந்நிலையில், நீலம் சிங் நோயாளர்களை பாடசாலை பேருந்தில் சம்மதித்த போது ஆபத்துகளையும் அறிந்திருந்தார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மிக மோசமான நகரங்களில் மும்பை ஒன்றாகும்.