வியட்நாமில் ஏற்பட்ட பலத்த மழை, வெள்ளம் மற்றம் நிலச்சரவுகள் காரணமாக சுமார் 84 பேர் உயிரிழந்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டுள்ளன.

அத்துடன் இந்த அனர்த்தங்களில் சிக்கி மேலும் பலர் காணாமல்போயுமுள்னர்.

அது மாத்திமின்றி 52,933 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், 24,734 வீடுகள் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் இயற்கை பேரழிவு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுக்கான வழிநடத்தல் குழுவின் வியட்நாம் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வெள்ளத்தால் 107,500 ஹெக்டேர் நெல் மற்றும் உணவு பயிர்கள் அழிவடைந்துள்ளன. அதே நேரத்தில் 461,000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் மற்றும் கோழிகள் இறந்துள்ளதுடன் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டும் உள்ளன.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் 12 தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகளையும் சேதப்படுத்தியுள்ளது.

இந் நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக பிரதமர் நுயேன் ஜுவான் ஃபுக் நாடு தழுவிய பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

ஒக்டோபர் 10 முதல் வியட்நாமில் பலத்த மழை பெய்து வருகிறது. வியட்நாமின் கிழக்குக் கடல் என்றும் அழைக்கப்படும் தென்சீனக் கடலின் வடக்கில் குறைந்த அழுத்தம் காரணமாக குறைந்தபட்சம் ஒக்டோபர் 20 வரை இப்பகுதியில் தொடர்ச்சியான மழை பெய்யும் என்று வானிலை அதிகாரிகள் கணித்துள்ளனர்.