திருகோணமலை ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயது சிறுமியொருவரை அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல்  அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) கைது செய்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய ஒருவரையே இவ்வாறு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வயதுடைய சிறுமியை நான்கு மாதங்களாக காதலித்து வந்த நிலையிலே சிறுமியின் பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்று  வெருகல் பகுதியிலுள்ள  நண்பர் ஒருவரின் வீட்டில் இரண்டு நாட்களாக தங்கியிருந்த நிலையில் சந்தேக நபர் தொடர்பாக சிறுமியின் உறவினர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமியின் தாய் வெளிநாடு சென்றுள்ளதாகவும்,பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மூதூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு இன்றைய தினம் மூதூர் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.