நாடெங்கிலுமிருந்தும் அனைத்து அளவிலான வணிகங்களுக்கும் டிஜிட்டல் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் வகையில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை துரிதப்படுத்த LANKAQR இனை ஊக்குவிக்கும் மக்கள் வங்கி  இன் பாவனையை ஆரம்பித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி அண்மையில் ஏற்பாடு செய்திருந்த “ரட புராம LANKAQR” எனும் ஆரம்ப நிகழ்வின் போது இந்த LANKAQR டிஜிட்டல் கொடுப்பனவு முறை பாவனையை உத்தியோகபூர்வமாக அறிவித்தது. 

மக்கள் வங்கியின் சிரேஷ்ட உதவி பொது முகாமையாளர் (சில்லறை வங்கி) கே.பீ.ராஜபக்ஷ கருத்து தெரிவிக்கையில், 

“LANKAQR டிஜிட்டல் கொடுப்பனவு முறையின் மூலம் இலங்கையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளும் முறையை மாற்றியமைப்பதில் புரட்சியை ஏற்படுத்தும் இலங்கை மத்திய வங்கியின் முயற்சியின் ஒரு பகுதியாக மக்கள் வங்கி விளங்குவதையிட்டு பெருமகிழ்ச்சியடைகிறது. அவர்களது இலக்கை அடைவதற்கு தேவையான முழுமையான ஆதரவினை நாம் வழங்கிடுவோம். மக்கள் வங்கியினரான நாம், புதுமை மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கான எங்களது உறுதிப்பாட்டிற்கு உலக அரங்கில் அங்கிகாரம் பெற்றுள்ளதால் இது போன்ற தைரியமான, புதுமையான தொழில்நுட்பங்களுக்கு பழகிவிட்டோம். அதே போல் அவை இரண்டும் எமது இலக்கை அடைவதற்கு முக்கிய பலங்களாகவும் மாறிவிட்டன. இலங்கையின் வங்கியியல் துறையை டிஜிட்டல் ரீதியாக கொண்டு செல்லும் வகையில் இலங்கையில் புத்தாக்க நிலையத்தினை அறிமுகப்படுத்தியவர்களுள் நாம் முன்னணி வகிக்கிறோம். இது எமது புத்தாக்கத்துக்கான  உந்துதலுக்கும் டிஜிட்டல் ரீதியான முன்னெடுப்புக்களுக்கும் மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்திடும். “2020ஆம் ஆண்டில் அதிகமாக டிஜிட்டல்மயமாக்கப்பட்ட வங்கி” என்ற இலக்கை அடைந்திடும் விதத்தில் நாம் எமது டிஜிட்டல்மயமாக்கல்களை துரிதப்படுத்தியுள்ளோம். டிஜிட்டல்மயமாக்கலின் அனுகூலங்களை முழு நாட்டிற்கும் கொண்டு வருவதன் மூலம் இலங்கையில் வங்கித்துறையில் டிஜிட்டல் கண்டுபிடிப்புக்களில் இன்று நாம் முன்னணியில் உள்ளோம். இது எம்மை உலகின் சில முன்னணி வகிக்கும் நிதி நிறுவனங்களுடன் தொடர்ந்தும் சரிசம நிலையில் தக்கவைத்துள்ளது என்பதும் மற்றுமொரு சாதனையாகும்.” 

மக்கள் வங்கியின் டிஜிட்டல்மயமாக்கல் உந்துதல்கள் உள்நாட்டு சந்தையில் வியத்தகு டிஜிட்டல் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்தியது. ATMகள், பண வைப்பு இயந்திரங்கள் (CDMs) மற்றும் முழைளம இயந்திரங்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு தனித்துவமான கருத்தாக்கமான சுய வங்கி அலகுகளை தொடங்கிய வங்கிகளுள் மக்கள் வங்கி முன்னோடியாக உள்ளது. எனவே வாடிக்கையாளர்களுக்கு 24x7x365 வேளையும் வங்கிச் சேவைகளை சௌகரியமாகப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக உள்ளது. மேலும் பிற முன்னெடுப்புக்களில் சர்வதேச அளவில் புகழ்பெற்ற ““People’s Wave”” - மொபைல் வங்கி அப், ““People’s Wiz”” – தென்கிழக்காசியா, ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் முதல் டிஜிட்டல் வாடிக்கையாளர் ஒன்போர்டிங் அப்¬¬ளிகேஷன், “People’s Wyn” – பெருநிறுவன வாடிக்கையாளர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட மாதிரி போன்றவை விளங்குகின்றன. இவை இணைய வங்கி போர்டலாகவும், மொபைல் அப் ஆகவும் மற்றும்  ““People’s Web”” இணைய வங்கி போர்டலாகவும் கிடைக்கப்பெறுகின்றன.  

LANKAQR Code ஆனது நாட்டின் எந்தப் பகுதியிலும் உள்ள எந்தவொரு வணிகருக்கும் விரைவான, பாதுகாப்பான மற்றும் குறைந்த செலவில் டிஜிட்டல் கொடுப்பனவுகளை செயற்படுத்த இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்ட மற்றும் கட்டாயப்படுத்தப்படும் ஒரு பொதுவான விரைவு பதில் Quick Response (QR) குறியீட்டுத் தரமாகும். இது மொபைல் தொலைபேசிகளின் மூலம் மேற்கொள்ளப்படும் கொடுப்பனவுகளுக்கான தரத்தினை நிறுவிடும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டது ஆகும். அதனடிப்படையில், அனைத்து உரிமம் பெற்ற வங்கிகளும், உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களும் மற்றும் புதிய QR குறியீடு அடிப்படையிலான கட்டண தீர்வுகளையும் வழங்கிடும் உரிமம் பெற்ற மொபைல் தொலைபேசிகளை அடிப்படையாகக் கொண்ட மின் பண முறைமைகளை வழங்கிடும் சேவை வழங்குனர்களும்; இப்புதிய விவரக்குறிப்புக்கு இணங்க வேண்டும். 

LANKAQR க்கு இணக்கமான மொபைல் கொடுப்பனவு அப்பின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் ஸ்மார்ட் ஃபோனில் தங்கள் வங்கிக் கணக்குகளிலிருந்து வணிகர்களுக்கு கொடுப்பனவுகளை நேரடியாகவே செலுத்திட அனுமதிக்கிறது. கொள்வனவு இடம்பெறும் அதே நேரத்தில் வணிகரின் வங்கிக் கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படும். LANKAQR இனை பயன்படுத்தி கொடுப்பனவுகளைச் செய்திட, ஒரு வாடிக்கையாளர் வணிகர் காண்பித்திடும் LANKAQR  குறியீட்டினை மொபைல் கொடுப்பனவு அப்பின் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்பொழுது வணிகருக்கு உடனடியாக SMS ஒன்று கிடைக்கப்பெறும். இது பணம் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்துவதாக அமைந்திடும். 

LANKAQR இனை பாவிப்பதன் மூலம் எந்தவொரு வணிகருக்கும், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும் விரைவான, பாதுகாப்பான மற்றும் செலவு குறைந்த டிஜிட்டல் கொடுப்பனவுகளை LANKAQR எளிதாக்குவதால், சிறிய வணிகங்களுக்கு செலவு குறைந்த டிஜிட்டல் முறையில் பரிவர்த்தனை செய்ய ஊக்குவிப்பதை மக்கள் வங்கி நோக்கமாகக் கொண்டுள்ளது.

மக்கள் வங்கி அதன் 739 கிளைகளின் வலையமைப்பு, Lanka Pay Gateway உடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள 4000க்கும் மேற்பட்ட விஸ்தரிக்கப்பட்ட ATMகளின் வலையமைப்பு என்பவற்றைக் கொண்டுள்ளது.  நாடு முழுவதும் உள்ள 14 மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் டிஜிட்டல் வங்கிச் சேவைகளில் தலைவராக ரூ. 2 ட்ரில்லியன் பெறுமதியிலான சொத்துக்களைக் கொண்டும் விளங்குகிறது. நாடு முழுவதும் வியாபித்திருக்கும் மக்கள் வங்கியின் சுய வங்கிச் சேவை அலகுகளின் வலையமைப்புடன் வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளைக்குச் செல்லாமலே 24 மணிநேரமும் 365 நாட்களும் வசதியான மற்றும் வினைத்திறன் மிக்க வங்கி அனுபவத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். விவசாயம், ரியல் எஸ்டேட், வணிக அபிவிருத்தி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதி, இறக்குமதிகள் போன்ற தொழில்களை எப்போதும் ஆதரிப்பதன் மூலம் மக்கள் வங்கியானது நாட்டின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதில் தொடர்ந்தும் முன்னணியில் இருந்து வருகிறது. அதே நேரத்தில் நிதி ரீதியாக வலுவாகவும் எதிர்காலத்தினை எதிர்கொள்ள தயார் நிலையில் இருந்திடும் ஒரு சமூகத்தை உருவாக்கிடவும் உதவுகிறது.