யாழில் பல வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

Published By: Digital Desk 4

19 Oct, 2020 | 11:49 AM
image

சாவகச்சேரி - கச்சாய் பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

சாவகச்சேரி கச்சாய் பகுதியில் வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஒருவர் பதுங்கியிருப்பதாக பொலிஸாருக்கு நேற்று இரகசிய தகவல் கிடைத்துள்ளது.பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து பொலிஸார் குறித்த வீட்டினை சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டனர்.

இந்த சுற்றிவளைப்பின் போது யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 31 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

பொலிசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணையில் குறித்த இளைஞன் வவுனியா பேருந்து நிலையத்தில் சாதாரண ஊழியராக பணியாற்றுவதாகவும் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் பிரதான சந்தேக நபராக தொடர்பு பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும் பொலீசார் தெரிவித்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச அமைப்புகளை அவமதிப்பது புரிதலின்மையை வெளிப்படுத்துகிறது;...

2026-09-09 16:45:30
news-image

சத்துருக்கொண்டான், வந்தாறுமூலை படுகொலைகள் : சுயாதீன...

2026-09-09 19:48:51
news-image

இத்தாலிய கடற்படைக்குச் சொந்தமான ‘ITS GIUSEPPE...

2026-09-09 20:38:55
news-image

முச்சக்கரவண்டியை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு...

2026-09-09 20:34:08
news-image

வாகன இலக்கத் தகடு தட்டுப்பாட்டுக்கு 6...

2026-09-09 16:01:03
news-image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இந்திய...

2026-09-09 19:59:59
news-image

எல் நினோ தாக்கத்தால் நாட்டில் 8...

2026-09-09 19:41:21
news-image

இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின்...

2026-09-09 19:40:19
news-image

பம்பலப்பிட்டி முதல் தெஹிவளை வரையிலான சட்டவிரோத...

2026-09-09 19:26:29
news-image

நேபாள வெள்ளப்பெருக்கு : மீட்புப் பணிகளுக்காக...

2026-09-09 18:18:38
news-image

தென்னேகும்புறையில் கடைகளை அகற்றச் சென்ற அதிகாரிகளுக்கு...

2026-09-09 19:45:33
news-image

தலவாக்கலை மேல்கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஆண் ஒருவரின்...

2026-09-09 17:44:50