கொள்ளுப்பிட்டிய பகுதியில் சட்ட விரோத மதுபான தயாரிப்பு நிலையமொன்று முற்றுகையிடப்பட்டு மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களுடன் வெளிநாட்டு பிரஜையொருவர் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
கொள்ளுப்பிட்டிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பிலேயே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சட்ட விரோத மதுபான தயாரிப்பு நிலையத்திலிருந்து 40 லீற்றர் சட்ட விரோத மதுபானம், 888 லீற்றர் கோடா, சட்ட விரோதமாகக் கொண்டு வரப்பட்ட 920 சிகரெட்டுக்கள், தகரங்கள் 2, 3 எரிவாயு அடுப்புகள் மற்றும் 55 கிலோ அரிசி ஆகியன கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
சுற்றிவளைப்பின் போது 44 மற்றும் 54 வயதுடைய பெண்கள் இருவரும் 35 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு பிரஜையொருவருமே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM