அதிகரித்தது கொரோனா தொற்றுக்கள் - கட்டுப்பாடுகளை இறுக்கும் இத்தாலி

Published By: Digital Desk 3

19 Oct, 2020 | 10:08 AM
image

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்குவதற்கான புதிய நடவடிக்கைகளை இத்தாலி அறிவித்துள்ளது.

அந்நாட்டு பிரதமர் கியுசெப்பே கொன்டே  ஞாயிற்றுக்கிழமை மாலை தொலைக்காட்சி உரையில் தெரிவித்துள்ளதாவது,

"நாங்கள் நேரத்தை வீணடிக்க முடியாது, ஒரு பொது முடக்கல் நிலையை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்க வேண்டும், இது பொருளாதாரத்தை கடுமையாக சமரசம் செய்யலாம்.

கியுசெப்பே கொன்டே

"அரசாங்கம் இங்கே உள்ளது, ஆனால் எல்லோரும் தங்கள் பங்கைச் செய்ய வேண்டும்." என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும்,  "மிகவும் பயனுள்ள நடவடிக்கைகள் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாக இருக்கின்றன: முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணல் மற்றும் கை சுகாதாரம், உறவினர்களுடனும் நண்பர்களுடனும் நாங்கள் பாதுகாப்பைக் குறைக்கும் சூழ்நிலைகளில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த சூழ்நிலைகளில், அதிகபட்ச முன்னெச்சரிக்கை தேவை  என தெரிவித்துள்ளார்.

இத்தாலியில் 9.00 மணிக்குப் பிறகு பொது இடங்களை மூடுவதற்கும், உணவகங்களை திறக்கும் நேரம் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுமதிக்கும் அளவும் குறைக்கப்படவுள்ளது.

இத்தாலியில்  தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக நாளாந்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் குறித்த கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை  புதிய கொரோனா தொற்றாளர்களாக 11,705 பேரும், சனிக்கிழமை  10,925  பேரும் பதிவாகியுள்ளது.

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பத்தபோது இத்தாலி கடுமையாக பாதிக்கப்பட்டது. தற்போது அங்கு 414,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதோடு,36,500 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

ஐரோப்பாவில் கொரோனா வைரஸ் உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் பிரித்தானியா இரண்டாவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13
news-image

அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு எதிரான வழக்கு...

2024-03-26 17:06:35
news-image

இலங்கைக்கு வந்துகொண்டிருந்த கப்பலே அமெரிக்காவின் பல்டிமோர்...

2024-03-26 15:02:50