நாட்டில் இன்றையதினம் 63 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு அடையாளம் காணப்பட்ட 63 பேரில்  மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய 61 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 02 பேரும் அடங்குவர்.

இதனையடுத்து மினுவாங்கொடை கொத்தணிப் பரவலுடன் தொடர்புடைய கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையும் 2,075 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,538 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  2122 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 21 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,403 பேர் குணமடைந்தும் 13 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

அதேநேரம் வைரஸ் தொற்று சந்தேகத்தின் பேரில் 306 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.