அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக உலகில் அதிகம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவில் ஒரு மாநிலத்தில் மட்டும் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மிசோரம் - தமிழ் விக்கிப்பீடியா

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமில் கொரோனா தொற்றால் இதுவரை யாரும் உயிரிழக்காத அதே வேளை, இன்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை.

குறித்த மாநிலத்தில் இதுவரை 2 ஆயிரத்து 253 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் 2 ஆயிரத்து 253 பேர் சிகிச்சைப்பெற்று  குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதுடன்  குணமடைந்தோர் விகிதம் 95.34% ஆக உள்ளது.

ரூபாய்க்கு பதில் புதிய பணம் - மிசோரம் மக்களின் பலே ஐடியா! | Alternate idea  for currency by Mizoram people

"மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகாரப்பூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33%. கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 1,097,206 . இந்த மாநிலத்தை திரிபுரா, அசாம், மணிப்பூர் ஆகிய மாநிலங்கள் சூழ்ந்துள்ளன."

 

இந்நிலையில் தற்போது  கொரோனா தொற்றுக்குள்ளான  105 பேர் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதகாவும்   கொரோனா தொற்றால் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை எனவும்  மிசோரம் மாநிலஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு ஒன்பது மாதங்கள் ஆகின்ற நிலையில், அங்கு  51 லட்சம் பேருக்கும் மேல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று காரணமாக 81 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரணங்கள் பதிவாகியுள்ளன.