பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 176 ஓட்டங்களை குவித்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 36 ஆவது போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

துபாயில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்கள‍ை குவித்தது.

மும்பை அணி சார்பில் டிகொக் 53 ஓட்டங்களையும், குருனல் பாண்டியா 34 ஓட்டங்களையும், பொல்லார்ட் 34 ஓட்டங்களையும், கூல்டர்-நைல் 24 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் பஞ்சாப் அணி சார்பில் மொஹமட் ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளையும், கிறிஸ்டன் ஜோர்தன் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.