சூப்பர் ஓவரில் பேர்குசனின் பந்து வீச்சில் சரணடைந்த ஐதராபாத்

Published By: Vishnu

18 Oct, 2020 | 07:54 PM
image

சூப்பர் ஓவரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி இலகுவான வெற்றியை பதிவுசெய்துள்ளது.

13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 35 ஆவது போட்டி டேவிட் வோர்னர் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத், இயன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் அணிகளுக்கிடையே ஆரம்பமானது.

அபுதாபியில் இன்று பிற்பகல் ஆரம்பமான இப் ‍போட்டியில் முதலில் துடுத்பெடுத்தாடிய கொல்கத்தா அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை குவித்தது.

கொல்கத்தா அணி சார்பில் சுப்மன் கில் 36 ஓட்டங்களையும், இயன் மோர்கன் 34 ஓட்டங்களையும், தினேஷ் கார்த்திக் 29 ஓட்டங்களையும், நிட்டிஸ் ராான 29 ஓட்டங்களையும், ராகுல் திரிபாதி 23 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர்.

பந்து வீச்சில் ஐதராபாத் அணி சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், பசில் தம்பி, விஜய் சங்கர்  மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

164 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த ஐதராபாத் அணியும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 163 ஓட்டங்களை பெற்றது.

இதனால் ‍போட்டி சூப்பர் ஓவருக்கு சென்றது.

ஐதராபாத்  அணி சார்பில் அதிகபடியகா ஜோனி பெயர்ஸ்டோ 36 ஓட்டங்களையும், கேன் வில்லியம்சன் 29 ஓட்டங்களையும், அப்துல் சமாட் 23 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 47 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றனர். 

கொல்கத்தா அணி சார்பில் பந்து வீச்சில் லொக்கி பெர்குசன் 3 விக்கெட்டுகளையும், வருன் சக்கர்த்தி, பேட் கம்மின்ஸ், சிவம் மாவி ஆகியோர் தலா ஒவ்‍வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

சூப்பர் ஓவரில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணியின் முதல் விக்கெட் முதல் பந்துலேயே வீழ்த்தப்பட்டது. 

அதன்படி டேவிட் வோர்னர் லொக்கி பெர்குசனின் பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து அப்துல் சமாட் களமிறங்கி, முதல் பந்தில் இரண்டு ஓட்டங்களை பெற்று அடுத்த பந்து வீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

சூப்பர் ஓவரின் விதிப்படி ஐதராபாத் அணியின் இரண்டு விக்கெட்டுகளும் 2 ஓட்டங்களுக்கு வீழ்த்தப்பட கொல்கத்தாவுக்கு வெற்றியிலக்காக 3 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

‍வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த கொல்கத்தா அணியின் ஆரம்ப வீரர்களாக இயன் மோர்கன் மற்றும் தினேஷ் கார்த்திக் களமிறங்கினர்.

ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்ள கொல்கத்தா அணியானது நான்காவது பந்து வீச்சில் வெற்றி பெற்றது.

இதேவேளை துபாயில் ஆரம்பமாகவுள்ள மற்றொரு போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதுகின்றன.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35