இலங்கையின் லங்கா பிரிமியர் லீக்கின் கிரிக்கெட் தொடரின்(LPL) உத்தியோகபூர்வ இலச்சினை வெளியிடப்பட்டுள்ளது. 

இலங்கை தேசிய கொடியின் முக்கிய சின்னமாகக் காணப்படும் சிங்கத்தின் தைரியம், உறுதி மற்றும் வீரம் ஆகியவை லங்கா பிரிமியர் லீக் (LPL) சின்னத்தின் மையப்பொருளாகக் கொண்டு இந்த இலச்சினை உருவாக்கப்பட்டுள்ளது.

இலச்சினையில் காணப்படும் சிவப்பு , செம்மஞ்சள் வண்ணங்கள், வரலாற்று புகழ் கொண்ட கண்டிய ஓவியங்கள் மற்றும் இலங்கை சிகிரிய ஓவியங்கள் ஆகியவற்றை அடையாளப்படுத்துவதுடன் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்கள் பயன்படுத்தப்பட்டமை இலங்கை கிரிக்கெட்டின் வண்ணங்களை சித்தரிப்பதாக அமைந்துள்ளன.

சிங்கத்தின் உடலில் பயன்படுத்தப்பட்ள்ள நிறங்கள் தொடரில்  கலந்துகொள்ளும் ஐந்து அணிகளை குறிக்கின்றன. 

அத்துடன் சிங்கத்தின் மேல் பகுதியில் காணப்படும் வண்ணங்கள் நாட்டிலுள்ள அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட விளையாட்டாகக் காணப்படும் கிரிக்கெட்டின் மீது மக்கள் காட்டும் ஆர்வத்தைக் குறிக்கின்றது.

இது குறித்து எல்.பி.எல் இலச்சினையைப் பற்றி LPL பிரதம நிறைவேற்று அதிகாரி அனில் மோகன் தெரிவிக்கையில்,

“LPL இலச்சினையானது இலங்கையிலுள்ள அதன் மக்கள், கலாச்சாரம் மற்றும் கிரிக்கெட்டுக்கும் மிகவும் தனித்துவமானது என்பதையே சித்தரிக்கிறது. இது நாட்டில் அனைவரின் மனதிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. அதேநேரத்தில் இது உலகளாவிய வேண்டுகோளையும் கொண்டுள்ளதோடு, இது எமது சர்வதேச பார்வையாளர்களை LPL உடன் எளிதாக இணைக்கவும் உதவுகிறது.

அத்துடன் இது தேசத்தின் உணர்வையும் கைப்பற்றியுள்ளதுடன் இதைவிட சிறந்த எதையும் நாங்கள் கேட்டிருக்கமுடியாது.”என தெரிவித்தார்.