யாழ்பாணத்தில் வீடொன்றில் புகுந்து தங்கக் கட்டிகளை கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய   இருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

20 வயதான இளைஞர் மற்றும் யுவதி ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரும் நேற்று (20) இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் இருவரும் வவுனியா, சிதம்பரப்புரம் பகுதியை சேர்ந்தவர்களெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை சந்தேக நபர்கள் இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.