கொரேனா தொற்று காரணமாக மாத்துகமையில் உள்ள 3 கிராமங்களுக்கு  தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதா பொலிஸ் தலமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஓவிடிகல கிரமசேவகர் பிரிவு, பதுகம கிரமசேவகர் பிரிவு, பதுகம புதிய கொலணி கிரமசேவகர் பிரிவு ஆகிய மூன்று பிரிவுகளுக்கே உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல்  ஊரடங்கு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசங்களுக்கு வெளிநபர்கள் செல்லுதலும் வெளியிலிருந்து குறித்த பிரதேசங்களுக்கு செல்லவும் முற்றாக தடைவித்திக்கப்பட்டுள்ளது.

எனினும் உயர்தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் தமது பரீட்சை நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.