கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தராமாக இழக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. 

இங்கிலாந்து விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை முன்னெடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் பக்க விளைவாக செவித்திறன் இழக்கு ஏற்படுவதாகவும், உடனடி சிகிச்சை அளிப்பதன் மூலம் கேள்திறனை மீட்டெடுக்க முடிமெனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், லண்டனில் 45 வயதான ஆஸ்துமா நோயாளி ஒருவர் கொரோனா ரைவஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையின் பின்னர் குணமடைந்தார். எனினும் அவரது காதுகள் கேட்கும் திறனை இழந்துள்ளன. வைரஸால் ஏற்படுகின்ற அழற்சியும், உடலில் இரசாயணங்கள் அதிகரிப்பதும், காதுகள் கேட்கும் திறனை இழக்கச்செய்வதாக ஆய்வை மேற்கொண்ட விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளமையும் முக்கிய அம்சமாகும்.