மன்னார் புதுகுடியிருப்பு நூறுவீட்டுத் திட்டம் பகுதியில் இருந்து கடத்த தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த  சுமார் 335 கிலோ கிராம் எடை கொண்ட உலர்ந்த கடலட்டைகள் இன்று(18) ஞாயிற்றுகிழமை மதியம் 12 மணியளவில்  மன்னார் மாவட்ட பொலிஸ் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக மாவட்ட குற்றப் புலனாய்வு பொறுப்பதிகாரி மற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான மன்னார் மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவினரின் தலைமையிலான குழுவினரே மேற்படி  புதுக்குடியிருப்பு பகுதியில் புகையிரத கடவைக்கு அருகில் கடத்தி செல்வதற்கு  தாயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த கடலட்டை மூடைகளை கைப்பற்றியுள்ளனர்.

மேற்படி கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் அனைத்தும் மேலதிக விசாரணையின் பின் மன்னார் மாவட்ட நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளபட்டுள்ளது.

 கைப்பற்றப்பட்ட கடலட்டைக்கள் சுமார் 11 இலட்சத்து 75,000 ரூபாய்    பெறுமதியானவை என தெரிய வந்துள்ளது.மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.