(செ.தேன்மொழி)

கொள்ளுப்பிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் மதுபானம் தயாரித்த சீன பெண்கள் இருவர் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்படடுள்ளனர்.

கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் உள்ள வீட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை சட்டவிரோத மதுபான உற்பத்தி இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட விசாரணைகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் மதுபான உற்பத்திக்காக பயன்படுத்திய பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். சந்தேக நபர்கள் குறித்த வீட்டை வாடகைக்கு பெற்றுக் கொண்டுள்ளதாகவும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 

கொள்ளுப்பிட்டி பொலிஸார் இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.