ஆப்கானிஸ்தானின் மேற்கு மாகாணமான கோரில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை நடந்த தற்கொலை கார் குண்டுத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இந்த அனர்த்தத்தில் 102 பேர் காயமடைந்துள்ளதாக ஆப்கானஸ்தானின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

காயமடைந்த பலரின் நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளமையினால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

இந்த குண்டுவெடிப்பு மாகாண தலைநகர் ஃபிரூஸ்கோவில் இடம்பெற்றது.

பொலிஸ் தலைமையகத்துடன், நீதித்துறை அலுவலகங்கள், பெண்கள் விவகாரத் துறை மற்றும் பல அரசு நிறுவனங்கள் குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதியைச் சுற்று அமைந்துள்ளன.

இந்த குண்டு வெடிப்புக்கு எந்த அமைப்பும் இன்னும் பொறுப்பேற்கவில்லை.