'20ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனையல்ல': சரத் வீரசேகர

Published By: J.G.Stephan

18 Oct, 2020 | 03:46 PM
image

(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் தனிப்பட்ட தரப்பின் யோசனை அல்ல. ஆளும் தரப்பின் அனைத்து உறுப்பினர்களின் யோசனைகளுக்கு அமையவே உருவாக்கப்பட்டது. எனவே 20 ஆவது திருத்ததினால் அரசாங்கத்திற்குள் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் நாட்டு நலன் கருதி கொண்டு வரப்படவில்லை. அரசியல் பழிவாங்கள் உள்ளிட்ட குறுகிய நோக்கங்களை பின்னணியாக கொண்டு உருவாக்கப்பட்டது. 20 ஆவது திருத்தம் ஒரு வார காலத்திற்குள் உருவாக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வழங்கிய வாக்குறுதியை நம்பி அப்போதைய எதிர்க்கட்சியினர் 19ஆவது திருத்தத்துக்கு ஆதரவு வழங்கினார்கள்.

எவரது வாக்குறுதியின் மீதும் நம்பிக்கை கொள்ள முடியாத காரணத்தினால் நான் மாத்திரம் தற்துணிவுடன் 19ஆவது திருத்ததுக்கு எதிராக வாக்களித்தேன். 19 வது திருத்தம் நல்லாட்சியின் சாபக்கேடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சிக்கும் அளவிற்கு அது தாக்கத்தை ஏற்படுத்தியது.

நல்லாட்சி அரசாங்கத்தின்  வீழ்ச்சிக்கு 19ஆவது திருத்தமே மூலக்காரணியாகும். இத்திருத்ததை இரத்து செய்யாமல் அரச நிர்வாகத்தை சிறந்த முறையில் முன்னெடுத்து செல்ல முடியாது என்பதற்காகவே 20 ஆவது திருத்தம் உருவாக்கப்பட்டது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33