கொவிட் 19 வைரஸ் தொடர்பில் தகவல்களை பெறுவதற்கு சுகாதார சேவைகள் மேம்பாட்டு பணியகம் 1999 என்ற இலக்கத்தை அறிமுகம் செய்துள்ளது.

அந்தவகையில் குறித்த ஆன்லைன் இலக்கத்துக்கு அழைப்பினை ஏற்படுத்தி சுகாதார விதிமுறைகள் மற்றும் விசாரணைகளை அறிந்துக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு கொரோனா வைரஸை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்து இவ் இலக்கதின் ஊடாக ஆலோசனை பெறமுடியுமெனவும் அதன் உயர் அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.