ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் (கே.டி.பி) தலைமையகத்தை ஹஷ்த் அல்-ஷாபி போராளிகளின் ஆதரவாளர்கள் கொள்ளையடித்து தீ வைத்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மத்திய பாக்தாத்தின் கரடா மாவட்டத்தில் அமைந்துள்ள குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சி வளாகத்திலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கட்டிடத்துக்குல் நுழையாமல் தடுக்க பாதுகாப்பு படையினர் தவறி விட்டதாக பொலிஸார் குற்றம் சாட்டியுள்ளனர்.

உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இன்னும் வெளியாத நிலையில் சம்பவம் குறித்து கே.டி.பி இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை.

எர்பில் விமான நிலையத்தில் அண்மையில் நடந்த ராக்கெட் தாக்குதல்களுக்கு ஷியா போராளிகளைக் குற்றம் சாட்டிய கே.டி.பி அதிகாரி ஹோஷியார் ஜீபாரி கூறிய அறிக்கைகள் தொடர்பாக ஹஷ்த் அல்-ஷாபி போராளிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் கோபம் அதிகரித்து வருகிறது.

ஜீபாரியின் அறிக்கைகள் ஈராக்கில் ஈரான் ஆதரவு ஷியா கட்சிகளிடமிருந்து கண்டனங்களயைும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன.

கே.டி.பி என்பது வடக்கு ஈராக்கின் குர்திஷ் பிராந்தியத்தில் ஆளும் கட்சிகளில் ஒன்றாகும்.