சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து கூலி வேலையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெங்காலிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாணந்துறை பிரதேசத்தில் தங்கியிருந்த நிலையில் இவர்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குறித்த இருவரையும் பாணந்துறை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.