மட்டுவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயம்

By T Yuwaraj

18 Oct, 2020 | 08:49 AM
image

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின், செட்டிபாளையம்  பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (18) அதிகாலை இடம்பெற்ற வாகன  விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் வண்டியை அதே வீதியூடாக பயணித்துக்கொண்டிருந்த கார் முந்திச்செல்ல முயற்சித்த போதே இந்த விபத்து சம்பவித்துள்ளது. 

இவ் விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் காயமடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்

இவ் விபத்தின் போது காரினது முன் பகுதி பலத்த சேதமடைந்ததுடன் பஸ் வண்டியின் பின் பகுதிக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இவ் விபத்து குறித்து மேலதிக விசாணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right