நியூசிலாந்தில், பாராளுமன்றத்திற்கு இலங்கையைில் பிறந்த வனுஷி வால்டர்ஸ் என்ற 37 வயது தமிழ் பெண்மணி தெரிவாகியுள்ளார்.

இவர் இலங்கையில் புகழ்பெற்ற சரவணமுத்துவின் அரசியல் குடும்பத்தின் வாரிசு ஆவார்.

Vanushi Walters becomes first Sri Lanka born MP in New Zealand Parliament -  NewsWire

 நியூசிலாந்து பாராளுமன்றத்தில் உறுப்பினராகும் இலங்கையில் பிறந்த முதல் நபராக இவர் தற்போது தெரிவாகியுள்ளார்.

நியூசிலாந்தில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் வடமேற்கு ஆக்லாந்தில் தொழிற்கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் மூலம் இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

home page - New Zealand Parliament

 

தொழில்நுட்ப நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகியும், ஹாமில்டனுக்கான கிரிக்கெட் வீரருமான தேசிய வேட்பாளர் ஜேக் பெசன்ட் என்பருக்கு எதிராக ஒரு குறுகிய வாக்கு வித்தியாசத்தில் இவர் தெரிவாகியுள்ளார். பெசாண்டின் 12,727 வாக்குகளையும், வனுஷி வால்டர்ஸ்  14,142 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

Image may contain: 16 people, people standing and indoor

யாழ்ப்பாணம் மானிப்பாயைப் பூர்வீகமாகக் கொண்டது இவரது குடும்பம். வனுஷியின் தந்தை வழிவந்த பாட்டி லூசியா சரவணமுத்து இலங்கையின் அரசுப் பேரவையின் உறுப்பினராக கொழும்பு வடக்கு தொகுதியிலிருந்து 1931 இல் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

மேலும் செய்திகள்...

 அவரது கணவரான சேர் ரட்ணசோதி சரவணமுத்து கொழும்பு மாநகர சபையின் தெரிவு செய்யப்பட்ட முதலாவது மேயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவரது பெயரிலேயே சரவணமுத்து விளையாட்டு அரங்கு அமைக்கப்பட்டது.

Spotlight on: Vanushi Walters | Office of Ethnic Communities

 வனுஷி வால்டர்ஸ் தமது 5 வயதில் நியூசிலாந்திற்கு குடிபெயர்ந்துள்ளார், இவரது தந்தை காலஞ்சென்ற ஜனா இராஜநாயகம், தாயார் பவித்திரா ஆவர்.

வோல்ட்டேர்ஸ் என்பவரைத் திருமணம் செய்த வனுஷிக்கு மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளார்கள்.

வால்டர்ஸ் ஒரு மனித உரிமை வழக்கறிஞராகவும், மனித உரிமைகள் ஆணையகத்தின் மூத்த மேலாளராகவும் பணியாற்றியுள்ளார். அத்துடன்  வனுஷி  சர்வதேச மன்னிப்புச் சபையின் சர்வதேச நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பதவி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Image may contain: 5 people, people standing, car, sky and outdoor, text that says 'CEP OVIN √ Van Wah for Uppe Lab'