நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முகத்திறமையோடு பவனி வரும் இளைய தலைமுறை ரசிகர்களின் நம்பிக்கை நட்சத்திரம் தனுஷ். இவர் தமிழைக்கடந்து இந்தியா முழுமைக்கும் ஏன் உலகத்தையே திரும்ப பார்க்கவைத்தது அவருடைய ‘வை திஸ் கொலை வெறிடா..’ என்ற பாடல். இது வரை ஒரு கோடிக்கும் மேல் இணைய தளத்தில் பார்க்கப்பட்டு சாதனை படைத்திருக்கும் இந்த பாடலை, தனுஷ் மீண்டும் ஒரு முறை பாடியிருக்கிறார்.  ஆனால் இந்த முறை இந்த பாடலை அவர் தெலுங்கில் பாடியிருக்கிறார்.

ஆம் தெலுங்கின் முன்னணி நடிகரான சாய் தரம் தேஜ் நடிக்கும் திக்கா என்ற படத்திற்காக இந்த பாடலை, அப்படத்தின் இசையமைப்பாளராக எஸ்.எஸ். தமன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பாடி கொடுத்திருக்கிறார். இந்த படத்தின் பாடல்கள் இம்மாதம் 30 ஆம் திகதியன்று வெளியாகிறது. தற்போதே இந்த பாடல் தெலுங்கிலும் பெரிய வெற்றியைப் பெறும் என்கிறார்கள் ஓடியோ உரிமையை வாங்கியிருக்கும் நிறுவனம். இதன் மூலமாக தெலுங்கு உலகிலும் கால்பதிக்கிறார் தனுஷ். ஏற்கனவே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், விஷால், சூர்யா, கார்த்தி ஆகியோர் தெலுங்கில் பிரபலமாக இருக்கிறார்கள். அந்த வரிசையில் விரைவில் தனுசும் இணையக்கூடும் என்கிறார்கள் திரையுலகினர்.

தகவல் : சென்னை அலுவலகம்