தமிழ் திரைப்பட ரசிகர்கள் மட்டுமல்ல உலகத்தில் வாழும் அனைத்து ரஜினி ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கும் கபாலி படத்தின் ஒரு பகுதி இணையத்தில் வெளியாகியுள்ளது.

கபாலி படத்தில் ரஜினியின் அறிமுகப்பகுதியே இவ்வாறு இணையத்தில் வெளியாகியுள்ளது.இதில் ரஜினி மலேசிய சிறையிலிருந்து வெளியே வருவது போலவும், வெளியே வந்தவுடன் அவரிடம் 30 அப்பாவி தமிழர்கள் என்கவுண்டரில் சுடப்பட்ட செய்தியை சொல்வது போலவும் உள்ளது.

படம் வெளியாவதற்கு முன்னர் படத்தின் ஒரு பகுதி இவ்வாறு வெளியாகியமையால் தமிழ் சினிமாதுறையில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோ எங்கு யாரால் எடுக்கப்பட்டது? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அமெரிக்காவில் ரஜினிக்கு விஷேடமாக படத்தை திரையிட்டு காட்டியபோது தான் யாரோ அதை மறைந்திருந்து படமெடுத்து பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.

இதேவேளை படம் வெளியாக ஒரு நாள் இருக்கும் வேளையில் படத்தின் ஒரு பகுதி எவ்வாறு வெளியானது என படக்குழுவினர் ஆராய்ந்து வருகின்றன.