நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மேலும் 10 பேர் பூரண குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அந்தவகையில் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து இதுவரை  3,395 பேர்  பூரண குணமடைந்துள்ளனர்.

நாட்டில் சுமார் 1,946 பேர் கொரோனா தொற்று ஏற்பட்டடுள்ள நிலையில், சிகிச்சைகள் பெற்று வருகின்ற நிலையில் , 255 பேர் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர். 

அதன்படி நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.