கொரோனா தொற்றுக்குள்ளான அமெரிக்காவின் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கெய்லீ மெக்னானி குணமடைந்துள்ளார்.

சமீபத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான வெள்ளை மாளிகையின் முக்கிய பல உயர் அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணிக்குப் பிறகு, 32 வயதான வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளரான கெய்லீ மெக்னானி கொரோனா தொற்றுக்குள்ளானார்.

இவருக்கு ஒக்டோபர் 5 ஆம் திகதி கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இந்நிலையில், கொரோனாவிலிருந்து மீண்டது பாக்கியம்! என மெக்னானி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் புள்ள விபரங்களின்படி, அமெரிக்காவில் 8,049,396 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியதோடு, 218,588 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.