இன்றைய திகதிகளில் அலுவலகம், வீடு, பயணம் என அனைத்து நேரங்களிலும் ஆண்களோ பெண்களோ கணினி, தொலைபேசி, தொலைகாட்சி என பலவற்றை கண்களை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இதனால் அவர்களுடைய கண்கள் வறண்டு விடுகின்றன. கண்கள் இமைப்பதன் மூலமே கண்கள் தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை பராமரித்து வருகின்றன. இந்நிலையில் கணினி மற்றும் தொலைபேசி ஆகியவற்றை கண்களை இமைக்காமல் பார்த்து வருகிறோம். அத்துடன் இரவிலும் போதிய வெளிச்சமில்லாமலும் இதனை உற்று கவனித்து வருகிறோம். இதனால் கண்கள் பாதிக்கப்படுகிறது. இதற்கு இது வரை மருந்து அதாவது ட்ராப்ஸ் வடிவில் கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் இதற்கான மருந்து கண்டறியப்பட்டிருக்கிறது. இதனை அங்குள்ள சுகாதர அமைப்பும் இதனை அங்கீகரித்திருக்கிறது. இந்த மருந்து விரைவில் தெற்காசியாவிலும் அறிமுகப்படுத்தப்படலாம்.
தற்போது இதற்கு ஸுட்ரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து, கண்களை மருத்துவர்கள் பரிசோதித்து கண்கள் வறண்டிருப்பதை உறுதி செய்தவுடன், இந்த மருந்தை பயன்படுத்துமாறு பரிந்துரைப்பார்கள். இந்த ட்ராப்ஸை கண்ணில் விட்டவுடன், இது செயற்கையாக கண்ணீரை வரவழைக்கிறது. இதன் மூலம் கண்கள் தங்களுக்கு தேவையான ஈரப்பதத்தை உறிஞ்சுகொள்கிறது. இருப்பினும் இரு ஒரு நிவாரணமாகத்தான் கடைபிடிக்கவேண்டும் என்றும், நிரந்தர தீர்வாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.
பொதுவாக கணினியை போதிய இடைவெளி மற்றும் போதிய வெளிச்சத்துடன் தான் இயக்கவேண்டும். அதேபோல் இரவில் படுக்கையறையில் குறைவான வெளிச்சத்தில் தொலைபேசி மற்றும் இணையதளத்தை பார்வையிடுவதை குறைத்துக் கொள்ளவேண்டும். அத்துடன் கண்களை ஒவ்வொரு மூன்று நிமிடத்திற்கு ஒரு முறை இமைக்கவேண்டும். இது இயல்பாகவே நடைபெறும் செயல்.
இந்நிலையில் கண்கள் வறண்டு போய்விட்டால் அதற்காக வருத்தப்படவேண்டியதில்லை என்பதே தற்போதைய மகிழ்ச்சியான செய்தியாகும்.
தகவல் : சென்னை அலுவலகம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM