ரஷ்­யா­வா­னது வட சிரி­யாவில் தனது வான் தாக்­கு­தல்கள் மூலம் இனத்துடைப்பு நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ள­தாக துருக்­கிய பிர­தமர் அஹ்மெட் டவு­டோக்லு குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

லதா­கியா பிராந்­தியத்தைச் சூழ்ந்­துள்ள பிர­தே­சங்­களில் வசிக்கும் துருக்­கிய இனத்­த­வர்­க­ளையும் சுன்னி சமூ­கத்­தி­ன­ரையும் இலக்கு வைத்தே ரஷ்யா தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தாக அவர் கூறினார்.

ரஷ்­யா­வா­னது சிரி­யா­வி­லான தனது தாக்­கு­தல்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­காகக் கொண்­டுள்­ளன என வலி­யு­றுத்தி வரு­கி­றது.

இந்­நி­லையில் டவு­டோக்லு விப­ரிக்­கையில், சிரி­யாவில் ரஷ்­யா வின் தாக்­கு­தல்கள் ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் பலம் பெறவே வழி­வகை செய்­துள்­ள­தாக கூறி னார்.

சிரிய எல்­லையில் துருக்­கியால் ரஷ்ய போர் விமா­ன­மொன்று சுட்டு வீழ்த்­தப்­பட்­ட­தை­ய­டுத்து துருக்­கிக்கும் ரஷ்­யா­வுக்­கு­மி­டை­யி­லான உற­வுகள் முறுகல் நிலையை அடைந்­துள்­ளன.

இந்­நி­லையில் ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்டின் மேற்­படி சுட்டு வீழ்த்­தப்­பட்ட விமா­னத்தின் தரவு பதிவு கரு­வியை பகுப்­பாய்வு செய்­வ­தற்கு பிரித்­தா­னிய நிபு­ணர்­களின் உத­வியைக் கோரி­யுள்­ள­தாக ரஷ்ய அதி­கா­ரிகள் தெரிவிக்கின்றனர்.

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனுடனான தொலைபேசி உரையாடலின் போதே ரஷ்ய ஜனாதிபதி மேற்படி உதவியைக் கோரியுள்ளார்.