இன்றைய தினம் நடைபெற்ற 13 ஆவது ஐ.பி.எல். தொடரின் 32 ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 8 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிகொண்டுள்ளது. 

Quinton de Kock and Rohit Sharma

இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய நைட்ரைடர்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில்  148 ஓட்டங்களை பெற்று கொண்டது அதில் பேட் கம்மின்ஸ் 53 ஓட்டங்களையும் மோர்கன் 39 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பின்னர் 149 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோகித் சர்மா, குயின்டான் டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

தொடக்கம் முதலே டி காக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அதிரடியான ஓட்டங்கள் குவிக்கப்பட்டன. இவர்கள் இருவரும் 10.3 ஓவரில் 94 ஓட்டங்களை பெற்றனர். இந்நிலையில், ரோகித் சர்மா 36 பந்துகளுக்கு 35 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தார். எனினும் ஆட்டமிழக்காமல் விளையாடிய டி காக் 25 பந்தில் அரைசதத்தை கடந்தார். 3-வது விக்கெட்டுக்கு டி காக் உடன் சேர்ந்து ஹர்திக் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த மும்பை இந்தியன்ஸ் 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை குவித்து எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடிய  டி காக், 44 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 78 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்ட்யா 11 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 21 ஓட்டங்களையும்,  ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.