ஐ.ரி.என் ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரவி வரும் செய்தி தொடர்பில் ஐ.ரி.என் தொலைக்காட்சி சேவை விளக்கம் அளித்துள்ளது.

தமது ஊழியர்களின் உடல் நலம் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் கொரோனா தொற்று பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஐ.ரி.என் தொலைக்காட்சி சேவை தெரிவித்துள்ளது.

எனினும் குறித்த ஊடகவியலாளருக்கும் சுகாதார அமைச்சினால் இன்னமும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் இது தொடர்பில் பொய்யான வதந்திகள் வெளியிடப்பட்டு வருவதாகவும் குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.