ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டு தடைக்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு - சுமந்திரன்

16 Oct, 2020 | 09:24 PM
image

வவுனியா வடக்குப் பகுதியில் அமைந்துள்ள, வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு அண்மை நாட்களாக நெடுங்கேணி பொலிசார் தடைவிதித்து வருகின்றனர்.

இந் நிலையில் இவ் வழிபாட்டுத் தடைக்கு எதிராக விரைவில் அடிப்படை உரிமைமீறல் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் யாழ்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆலயத்தில் வழிபாட்டிற்கு செல்வதற்கு பொலிசார் தடை விதித்துள்ளமை தொடர்பில், ஆலய நிர்வாகத்தினர் 16.10.2020 இன்றையதினம் வவுனியா தமிழரசுக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சுமந்திரனைச் சந்தித்து முறையிட்டனர்.

இச்சந்திப்பின் பின்னர் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டிருக்கின்றன. ஆலயத்தில் பூசைசெய்வதற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடை தொடர்பாக அந்த ஆலயத்தினுடைய, பூரவீகம், வரலாறு இவற்றை எல்லாம் வைத்து மக்கள் அங்கே வணங்குவதற்குரிய உரித்து அவர்களுக்கு இருக்கின்றது. 

அதை எவரும் தடுக்கமுடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்வதாக இருக்கின்றோம் - என்றார். வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுத் தடகை்கு எதிராக, அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்படும். என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44