மினுவங்கொட கொத்தணி பரவலில் மேலும் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 35 பேருக்கும், அவர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிய 14 பேருக்குமே இவ்வாறு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

 இதனையடுத்து கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 1,899 ஆக உயர்வடைந்துள்ளதுடன் நாட்டில்  கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354. ஆக உயர்வடைந்துள்ளது.

இதேவேளை, இன்றுமட்டும் இதுவரை 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.